கனமழையால் ஏரியில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கனமழை பெய்த காரணத்தினால் ஏரிகள் நிரம்பி உள்ளது. இந்நிலையில் 2 தினங்களுக்கு முன்பாக திடீரென பெய்த கனமழையின் காரணத்தினால் சிறுவளையம் ஏரியின் மத்தியில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்ததால் உடைப்பு ஏற்பட்டுள்ளது. ஆதலால் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து வெளியேற தொடங்கியுள்ளது. இதனையடுத்து அவ்வழியாக சென்ற பொதுமக்கள் இது பற்றி ஊராட்சி மன்ற தலைவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். […]
