தொடர் கனமழையால் அணையின் நீர்மட்டம் உயர்ந்ததால் 2-வது வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து பகுதிகளிலும் இருக்கும் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அதன்பின் அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டதில் வைகை அணை நீர்மட்டம் குறைந்து 55 அடிக்கும் கீழ் சென்றுள்ளது. தற்போது பரவலாக மழை பெய்வதால் பாசனத்திற்கான தண்ணீர் நிரப்பப்பட்டதால் […]
