சிவகங்கை அருகே, வெல்டிங் பட்டறையில் வேலை பார்த்து வந்த தொழிலாளி மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . சிவகங்கை மாவட்டம் அருகே உள்ள நாட்டரசன்கோட்டை என்னும் கிராமத்தை சேர்ந்தவர் வினோத்குமார். இவர் அப்பகுதியில் உள்ள வெல்டிங் பட்டறை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அப்பகுதியில் தனது மோட்டார் சைக்கிள் வாகனத்துடன் நின்று கொண்டிருந்த வினோத்குமாரை அந்த வழியாக வந்த மர்ம நபர்கள் திடீரென அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றனர். […]
