Categories
ஆன்மிகம் புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

புகழ்பெற்ற அரங்குளநாதர் கோவில்…. சிறப்பாக நடைபெற்ற திருவிளக்கு பூஜை…..!!!

திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருவரங்குளத்தில் புகழ் பெற்ற பெரியநாயகி அம்பாள் உடனுறை அரங்குளநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பெரியநாயகி அம்பாளுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட 9 வகையான அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றுள்ளது. பின்னர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதனையடுத்து திருவிளக்கு பூஜையில் ஏராளமான  பெண்கள் கலந்து கொண்டனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Categories

Tech |