வார்டு உறுப்பினர் தேர்தலையொட்டி பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மரக்காணம் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் வார்டு உறுப்பினருக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதை தடுக்கும்பொருட்டு பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வாக்காளர்களை கவரும் விதமாக ரொக்கமோ, பரிசு பொருட்களோ கொண்டு செல்லும் பட்சத்தில் பறக்கும் படையினர் அதனை பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்து விடுகின்றனர். இதனையடுத்து அனுமந்தை டோல்கேட் பகுதியில் […]
