நீலகிரியில் சாகுபடி செய்யப்படும் காய்கறிகளின் விலை குறைந்ததால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் முட்டைகோஸ், காலிபிளவர், முள்ளங்கி, உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், புரூக்கோலி, பூண்டு போன்ற காய்கறிகள் அதிகளவில் விளைவிக்கப்படுகின்றன. ஆனால் நீலகிரி மாவட்டத்திற்கு வெளி மாநிலங்களிலிருந்து மலை காய்கறிகள் அதிகளவில் விற்பனைக்காக கொண்டு வரப்படுவதால் உள்ளூரில் சாகுபடி செய்யப்படும் காய்கறிகளின் விலை குறைந்து விட்டது. இதுபற்றி வியாபாரிகள் கூறும் பொழுது பீன்ஸ், புரூக்கோலி, பூண்டு, பஜ்ஜி மிளகாய், கேரட் போன்ற பொருட்கள் ஒட்டன்சத்திரம், மைசூர், […]
