சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசு நினைவு இல்லமாக மாற்ற அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் மூலமாக போயஸ் கார்டன் வேதா நிலையத்தில் உள்ள பொருட்களை அரசுடமையாக்க வழிவகை செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் அவர் வாழ்ந்த சென்னை போயஸ் கார்டனில் உள்ள ‘வேதா இல்லத்தை அவரது நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு திட்டமிட்டது. இதற்காக நிதியும் ஒதுக்கீடு செய்தது. கடந்த 2017ம் […]
