மழைக்கு ஒழுகும் நூலகத்திற்கு புதிதாக கட்டிடம் கட்டி தருமாறு வாசகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சையது குளம் அருகாமையில் கிளை நூலகம் ஓன்று அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த நூலகத்தில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான நூல்கள் உள்ளது. இங்கு நாள்தோறும் 30-க்கும் அதிகமான வாசகர்கள் செய்தித்தாள்கள், மாத இதழ்கள் மற்றும் வார இதழ்கள் ஆகியவை படிப்பதற்காக வந்து செல்கின்றனர். அதன்பின் 100-க்கும் அதிகமான உறுப்பினர்கள் சந்தா செலுத்தி நூலகத்தில் இருக்கும் பல புத்தகங்களை வீட்டிற்கு எடுத்துச் […]
