கோவை மாவட்டத்தில் பட்டியலின பெண்ணை காதலித்ததால் தம்பியை வெட்டிக்கொன்ற அண்ணன் போலீசில் சரணடைந்தார். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சீரங்கராயன் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ். இவர் உருளைக்கிழங்கு மார்கெட்டில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். கனகராஜும் அதே பகுதியில் வசித்து வரும் பட்டியலினத்தைச் சேர்ந்த வர்ஷினி பிரியா என்ற பெண்ணும் ஓராண்டுக்கு மேலாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வர்ஷினி கனகராஜின் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது கனகராஜின் குடும்பத்தினர் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் கனகராஜின் அண்ணன் […]
