நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் தாமரை மலர்ந்துள்ளது என்றும், தமிழ்நாட்டில் தாமரை மலர்வதை யாராலும் தடுக்க முடியாது எனவும் வானதி சீனிவாசன் தெரிவித்தார். மத்தியில் ஆளும் பாஜக அரசு நிறைவேற்றியுள்ள இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. மாணவர்களும் இளைஞர்களும் அதனை தொடர்ந்து எதிர்த்து போராடி வருகின்றனர். இந்நிலையில், இதனை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் பாஜக கட்சியினர் ஆதரவுப் பேரணியை நடத்தி வருகின்றனர். தற்போது ஈரோடு, கோயம்புத்தூர், நாமக்கல், திருப்பூர், நீலகிரி, சேலம் […]
