இளம்பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்து விட்டு திருமணத்திற்கு மறுத்த வாலிபருக்கு நீதிமன்றம் 10 வருடம் சிறை தண்டனை விதித்துள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள கீழ்செருவாய் பகுதியில் பிரதாப் என்பவர் வசித்து வருகிறார். இவர் இன்ஜினியரிங் முடித்து விட்டு வேலையில்லாமல் இருக்கிறார். இந்நிலையில் பிரதாப் தனது பெரியப்பா வீட்டுக்கு சென்று வந்த போது அதே பகுதியில் வசிக்கும் 26 வயதுடைய இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியது. இதனையடுத்து பிரதாப் அந்தப் பெண்ணிடம் திருமணம் […]
