அஜித்தின் வலிமை திரைப்படத்தின் காட்சிகள் நீளமாக உள்ளது என கூறப்பட்ட நிலையில் படத்தின் சில காட்சிகள் நீக்கப்பட்டு இன்று முதல் புதிய வெர்ஷன் வெளியாகின்றது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து இருக்கின்றார். இத்திரைப்படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். வினோத் இயக்கியுள்ளார் மற்றும் ஹீமா குரேஷி ஹீரோயினாக நடித்துள்ளார். அஜித்தின் திரைப்படங்கள் கடந்த இரண்டு வருடங்களாக வெளியாகாத நிலையில் நேற்று முன்தினம் வலிமை வெளியாகியது. இதனால் ரசிகர்கள் கோலாகலமாக திருவிழா போல் கொண்டாடி […]
