காதலர் தினத்தை முன்னிட்டு 5 லட்சம் கார்னேசன் மலர்கள் நீலகிரி மாவட்டத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. உதகை அருகே உள்ள கூக்கல்தொரை, தும்மனட்டி, துனேரி, கொடநாடு உள்பட பல்வேறு பகுதிகளில் கொய்மலர் சாகுபடி அதிக அளவில் செய்யப்பட்டு வருகிறது. கார்னேசன், ஜெர்பரா, லில்லியம் போன்ற கொய்மலர்கள் பசுமை குடில்களில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில் சில விவசாயிகள் கார்னேசன் என்ற கொய்மலரை அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர். சிவப்பு, வெள்ளை, ஆரஞ்சு, பிங்க், மஞ்சள் என பல […]
