உலகெங்கிலும் உள்ள அனைத்து உயிருள்ள ஜீவன்களுக்கும் பொதுவானதாக அமைந்திருக்கும் ‘காதல்’ என்கிற மந்திரச் சொல்லைக் கொண்டாடும் நாளாக ‘பிப்ரவரி 14’ திகழ்கிறது. ‘காதல்’ என்பது வெறும் சொல் என்பதைவிட, அது ஒரு வாழ்வியல் என்பதே மெய். அந்த வாழ்வியலைக் கடக்காத மனிதர்களே இல்லை எனக் கூறலாம். இல்லை, இல்லை… காதலே செய்திடாத சிலரும் இருக்கிறார்கள் என்கிறீர்களா? ஆம், காதல் செய்துவிடக்கூடாது என்பதில் அவர்களுக்குக் காதல். இப்படி மனிதர்களின் வாழ்வோடு ஒன்றாகப் பிணையப்பட்டிருக்கும் காதலுக்கு சாதி, மதம் என […]
