கட்சி மாறிய வேட்பாளர்களை முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத் சால்வை அணிவித்து வரவேற்றுள்ளார். கடலூர் மாவட்டத்தில் காலியாக இருக்கின்ற உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் தற்போது நடக்க இருக்கிறது. இந்நிலையில் இரண்டாவது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க சார்பாக ஆதிலட்சுமி என்பவரும், தி.மு.க சார்பாக ஜெயப்பிரியா என்பவரும், தே.மு.தி.க சார்பாக ராதிகா என்பவரும், பா.ம.க சார்பாக மச்சகாந்தி மணிவண்ணன் ஆகிய வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதன்பின் வேட்பாளர் மச்சகாந்தி அவரது கணவரான இளைஞர் அணி இணைச் செயலாளர் மணிவண்ணன் உள்ளிட்ட […]
