நீர்வழிப்பாதைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரிய வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, வைகை நதியைப் பாதுகாக்கும் வகையில் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மதுரை மேலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் அருண்நிதி உள்ளிட்டோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவொன்றை தாக்கல் செய்திருந்தனர். அதில், “மதுரை மாவட்டம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் மற்றும் நீர்வழிப் பாதைகளை பலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் நீர்நிலைகளில் தண்ணீரைச் சேமிக்க முடியாத நிலை உள்ளது. நீர்வழிப் பாதைகள் ஆக்கிரமிப்பு காரணமாக தண்ணீர் முறையாகச் செல்வதில்லை. […]
