வடபழனி பணிமனையில் ஓய்வறையின் சுவர் இடிந்து விழுந்ததில் 2 பேருந்து ஓட்டுநர்கள் உயிரிழந்தனர். வடபழனி அரசு போக்குவரத்து பணிமனையில் ஓய்வறையின் அருகே உள்ள பேருந்து பழுது பார்க்கும் இடத்தில் இருந்து பேருந்து இயக்கப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சுவற்றின் மீது மோதியது. இதில் ஓய்வறையின் சுவர் இடிந்து விழுந்ததில் பேருந்து ஓட்டுநர்கள் சேகர், பாரதி ஆகியோர் உயிரிழந்தனர்.மேலும் 6 பேர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் ஆவேசம் அடைந்த ஊழியர்கள் […]
