மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் 80,787 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. கடலூர் மாவட்டத்தில் உள்ள தகுதி வாய்ந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் 6 பகுதிகளில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்றுள்ளது. இந்த சிறப்பு முகாமை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டு நோய் […]
