இரண்டு மிதிவண்டிகள், இரண்டு குடைகள், கடற்கரை மணலில் இரண்டு ஜோடி செருப்புகள் கூடவே ரெமாண்டிக் பதிவு என்று தனது விடுமுறை தருணங்களை பதிவிட்டு வருகிறார் தீபிகா படுகோனே. காதல் கணவர் ரன்வீர் சிங்குடன் வெளிநாடுகளில் விடுமுறையைக் கொண்டாடி வரும் தீபிகா படுகோனே, அழகான புகைப்படங்களை பதிவிட்டு லைக்ஸ்களை அள்ளி வருவதுடன், சிங்கிளாக சுற்றுபவர்களையும் சீண்டி வருகிறார். ரம்மியமான சூரியஒளி பின்னணியில் ஷெட்டில் நிறுத்தப்பட்ட இரண்டு மிதவண்டிகளின் புகைப்படங்களை பதிவிட்டு, ‘இருவரின் துணை’ #his&hers #vacation என்று குறிப்பிட்டுள்ளார். […]
