வேட்பாளரின் வாக்கு ஏற்கனவே தபால் வாக்காக பதிவு செய்யப்பட்டு இருப்பதாக அலுவலர் கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பானையங்கால் கிராமத்தில் மாரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி அங்கம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர் அதே பகுதியில் ஊராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிட்டு வருகிறார். இந்நிலையில் அங்காளம்மன் வாக்குச்சாவடி மையத்திற்கு வாக்களிப்பதற்காக சென்ற போது அலுவலர் ஒருவர் உங்களது வாக்கு தபால் வாக்காக பதிவு செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி […]
