Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இது வேற லெவல்”…. சிறப்பான கம்பேக் கொடுத்த ஹர்திக்…. குஷியான ரசிகர்கள்….!!!!

நீண்டநாள் காயத்தில் தவித்து வந்த ஹர்திக் சிறப்பான கம்பேக் கொடுத்துள்ளார். டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங்கில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், பௌலிங்கில் ரன்களை அருமையாக கட்டுப்படுத்தி ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். டி20 உலக கோப்பையில் அவருக்கு இடம் வழங்கப்படுவது சந்தேகம் என்ற பேச்சு வார்த்தை பரவலாக இருந்த நிலையில் முதல் இரண்டு ஆட்டங்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

Categories
கால் பந்து விளையாட்டு

பெண்கள் ஹாக்கி: இந்தியா போராடி தோல்வி…!!!

டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் ஹாக்கி பிரிவில் இந்தியா 0-2 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி அணியிடம் தோல்வி அடைந்தது. கடந்த ஆட்டத்தில் நம்பர் ஒன் அணியான நெதர்லாந்திடம்  5-1 என  தோல்வியடைந்த நிலையில், இன்றைய ஆட்டத்தில் இந்தியா மேலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆனாலும் ஜெர்மனியின் தாக்குதல் ஆட்டத்தில் தோல்வி அடைந்தது. புதன்கிழமை நடைபெறும் 3-வது ஆட்டத்தில் பிரிட்டன் அணியுடன் இந்தியா மோதும் என்று கூறப்பட்டுள்ளது.

Categories
கால் பந்து விளையாட்டு

தோல்வியடைந்த கோபத்தில்…. இத்தாலி ரசிகர்களை தாக்கிய இங்கிலாந்து ரசிகர்கள்…!!!

யூரோ கால்பந்து இறுதிப் போட்டியில் இத்தாலி அணி இங்கிலாந்தை வீழ்த்தியது. இதனால் ஆத்திரம் அடைந்த இங்கிலாந்து ரசிகர்கள் மைதானத்தில் இருந்து வெளியே வந்த இத்தாலி ரசிகர்களை தாக்க துவங்கின.ர் இந்த ஆட்டம் இங்கிலாந்தின் வெம்பிலி மைதானத்தில் நடைபெற்றதால் இங்கிலாந்து ரசிகர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இதனால் அந்த இடம் கலவரம் போல் காட்சியளித்தது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. https://youtu.be/fZADLaZ5zrU

Categories

Tech |