உசிலம்பட்டி அருகே தேர்தல் முன்விரோதம் காரணமாக ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்புரத்தைச் சேர்ந்தவர் பால்ராஜ் (45). இவர் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் உத்தப்புரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த முத்தையா (47) என்பவர் உள்ளாட்சித் தேர்தலில் பால்ராஜ்ஜுக்கு எதிராக சில மறைமுக செயல்களில் ஈடுபட்டதாக கூறி முத்தையா தரப்பினர் சிலர் தகராறில் ஈடுபட்டதாகக் […]
