என்.ஆர்.சி சட்டத்தினால் தமிழ்நாட்டில் ஒரு இஸ்லாமியருக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் அவர்களுக்கு ஆதரவாக அதிமுகதான் முதல் குரல் கொடுக்கும் என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சட்டப்பேரவையில் தெரிவித்தார். சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், சிறுபான்மை மக்களுக்கு நிதியுதவி வழங்குவதாகக் கூறும் அதிமுக, குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினார். ஸ்டாலினின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் உதயகுமார், “குடியுரிமை திருத்தச் சட்டம் இன்னும் அமல்படுத்தப்படவில்லை. உச்ச நீதிமன்றத்தில் இது […]
