ரஷ்யாவிடம் இருந்து S -400 ஏவுகணையை இந்தியா வாங்குவதால் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய விமான படை ரஷ்யாவிடமிருந்து, 400 கி.மீட்டர் தூரத்தில் வரும் போர் விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் ஆளில்லாத குட்டி விமானங்களை வழியில் மறித்து தாக்கி அழிக்கும் திறன் கொண்ட எஸ்.400 ரக அதிநவீன வான்வழி பாதுகாப்பு ஏவுகணைகளை வாங்க உள்ளது. சீனா மற்றும் பாகிஸ்தானின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கு இந்தியா ரஷ்யாவிடமிருந்து அதிநவீன S -400 ரக ஏவுகணைகளை வாங்க கடந்த சில ஆண்டுகளாகவே பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. […]
