வருடந்தோறும் நடைபெறும் பகல்பத்து உற்சவத்தை பக்தர்கள் கண்டு களித்து சென்றுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள தேவநாதசாமி கோவில் 108 வைணவ தலங்களில் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. இக்கோவிலில் வருடம்தோறும் பகல்பத்து உற்சவம் பத்து நாட்கள் வெகுவிமர்சையாக நடைபெற்று வருவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பகல்பத்து உற்சவம் தற்போது தொடங்கியுள்ளது. இதை முன்னிட்டு தேவநாதசாமி பெருமாளுக்கு சிறப்பு பூஜை மற்றும் திருமஞ்சனமும் நடைபெற்றுள்ளது. அதன்பின் தேசிகர் சாமி மற்றும் பெருமாள் புறப்பட்டு பகல்பத்து மண்டபத்திற்கு கொண்டு […]
