ஏராளமான மக்கள் பணத்தை கொடுத்து பொருள் வாங்குவதற்கு பதில் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்து கொள்வது எளிமையாக உள்ளதாக கருதுகின்றனர். இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (என்பிசிஐ) வெளியிட்ட டேட்டாவின்படி, சென்ற ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் யுபிஐ என பிரபலமாக அறியப்படும் யுனிபைட் பேமெண்ட்ஸ் இன்டர்பேஸ் மூலம் ரூபாய்.657 கோடி டிரான்ஸாக்ஷன் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் யூபிஐ வாயிலாக டிரான்ஸாக்ஷன் செய்யும் அளவானது வால்யூம் அடிப்படையில் 4.6 சதவீதமும், மதிப்பு அடிப்படையில் 1 சதவீதமும் அதிகரித்துள்ளது. […]
