யுபிஐ பண பரிமாற்றம் என்பது பெரும்பாலானோர் தற்போது பயன்படுத்தி வருகின்றனர். தங்கள் செல்போன் மூலமாக ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு உடனடியாக பணத்தை மாற்றுவதற்கு யுபிஐ அனுமதி வழங்குகிறது. மொபைல் சாதனங்களில் மட்டுமல்லாமல் ஆப்பின் மூலமாக இதில் பணத்தை செலுத்த முடியும். யுபிஐ வழியாக பணப் பரிமாற்றம் 24 மணிநேரம் என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகின்றது. இதனை இந்திய தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனம் வழிநடத்துகிறது. இது இந்தியாவில் சில்லறை மற்றும் மொத்த பரிவர்த்தனைகளை கட்டுப்படுத்துகிறது. […]
