காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ அதிதி சிங், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து பேசியதற்கு விளக்கம் கேட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ அதிதி சிங் கடந்த வியாழக்கிழமை அன்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து பேசினார். இதற்கு விளக்கம் கேட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் எம்எல்ஏ அதிதி சிங் இரண்டாவது முறையாக முதலமைச்சரை சந்தித்துள்ளதால் காங்கிரஸ் கட்சியினர் குழப்பமடைந்துள்ளனர். […]
