பொன்னமராவதியில் குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவாக பேசிய விவகாரத்தில் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொன்னமராவதியில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் பற்றியும் , அந்தச் சமூகத்தின் பெண்கள் பற்றியும் இருவர் தரக்குறைவாக பேசும் ஆடியோ, சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வைரல் ஆகி வந்தது . இழிவாக பேசியவர்களை கண்டித்து சம்மந்தப்பட்ட சமூக மக்கள் பொன்னமராவதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து வெளியாகிய ஆடியோ தொடர்பாகவும் , அதை சமூக வலைதளத்தில் பரப்பியவர் பற்றியும் போலீசார் விசாரணை மேற்கொண்டு […]
