மீனம் ராசி அன்பர்களே, கடந்த இரண்டு மூன்று நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகிச் சென்று அன்பு கிடைக்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். உடல் நலத்தை பொருத்தவரை இன்று சிறப்பாக இருக்கும். தடைப்பட்ட வேலைகள் தானே நடந்து முடியும். உத்யோகத்தில் புதிய தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஒத்துழைப்பும் பரிபூரணமாக கிடைக்கும். இன்று குடும்ப ஒற்றுமை மேலோங்கும். நீங்கள் எடுத்த காரியத்தை நிதானமாக செய்து முடிப்பீர்கள். எதையும் சாதிக்கும் திறமை வெளிப்படும். வெளியில் தங்கும் சூழ்நிலை உருவாகும். […]
