Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் பனிப்பொழிவை கொண்டாடும் பொதுமக்கள் …!!

அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையில் வீசிய பனிப்புயல் காரணமாக வாஷிங்டன், நியூயார்க் உள்ளிட்ட மாகாணங்களில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. பனிப்புயல் காரணமாக வெர்ஜினியா மற்றும் வடக்கு கரோலினா உள்ளிட்ட பகுதிகளில் லேசான பனி பொழிவு இருக்கும் என கிழக்கு பென்சில்வேனியாவில் இருந்து காட்ஸ்கில் மலை வரை இரண்டு அடி உயரத்திற்கு பனி நிறைந்திருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் பனி நிறைந்திருப்பதால் பொதுமக்கள் வீடுகளுக்கு உள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. டைம்ஸ் சதுக்கத்தில் லேசான பனிப்பொழிவு இருக்கும் நிலையில், பொது மக்கள் அதனை […]

Categories
உலக செய்திகள்

வெள்ளை மாளிகையில் தீபம் ஏற்றிய ட்ரம்ப்…. இந்தியர்களுக்கு தீபாவளி வாழ்த்து.!!

தீபாவளி பண்டிகையையொட்டி அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் தீபாவளி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும்விதமாக வெள்ளை மாளிகையில் தீபத்தை ஏற்றிவைத்த அதிபர் ட்ரம்ப், தீபாவளி திருநாளை அனைத்து மக்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வாழ்த்துக் கூறியுள்ளார். இதையொட்டி அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “அமெரிக்கா முழுவதும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது நமது நாட்டின் மிக முக்கியக் கொள்கையான மத சுதந்திரத்தை பேணும்வகையில் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார். இந்திய மக்கள் தீபாவளி கொண்டாடும் காலம் மிகவும் […]

Categories
உலக செய்திகள்

ஜப்பான் கியூஷு தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…. மக்கள் பீதி….!!

ஜப்பானின் கியூஷு தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது இது ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவானது. ஜப்பானின் தெற்கு கடற்கரை பகுதியான கியூஷ் தீவில் திடிரென்று சக்தி வாந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் மியாசகி பகுதியை மையமாக கொண்டு ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் மியாசகி நகரில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சத்தில் தனது வீடுகளில் இருந்து வெளியேறினார். உள்ளூர் நேரப்படி காலை 8.48 மணியளவில் […]

Categories
உலக செய்திகள்

136 பயணிகளை ஏற்றிச்சென்ற விமானம் ஆற்றில் விழுந்து விபத்து….!!

புளோரிடாவில் இருந்து 136 பயணிகளுடன் சென்ற விமானம் திடீரென ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து 136 பயணிகளை ஏற்றிச்சென்ற போயிங் 737 ரக விமானம், தரையிறங்கும் போது நிலை தடுமாறி விமான நிலையம் அருகே உள்ள ஆற்றில் விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. ஜாக்சன்வில்லில் உள்ள கடற்படை விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விமானம் நிலை தடுமாறி ஜான்ஸ் ஆற்றில் விழுந்ததாக விமான நிலைய செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

இந்த நாட்டில் தான் இந்திய மற்றும் சீன மாணவர்கள் அதிகமாக படிக்கின்றனர்..!!!

அமெரிக்காவில் பயிலும் மாணவர்களில் பெரும்பாலானோர் சீனாவையும், இந்தியாவையும் சேர்ந்தவர்கள் என்று உள்நாட்டு பாதுகாப்பு துறை தகவல் வெளியிட்டுள்ளது.    அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்புத் துறை தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இத்தகவளின் படி அமெரிக்காவில் உள்ள கல்வி நிறுவனங்களில் 11.7  லட்சம் வெளிநாட்டு மாணவர்கள் பயின்று  வருகின்றனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவில் 5.8 லட்சம் மாணவர்கள் படித்து வரும் நிலையில், இந்தியா மற்றும் சீனாவை கணக்கிடும் போது 49.5 சதவீதம் மாணவர்கலும் பயின்று வருகின்றனர். மேலும் இந்த துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்  75 சதவீதம் மாணவர்கள் முதுநிலை […]

Categories
உலக செய்திகள்

“ஆளில்லா விமானத்தில் மூலம் வந்த சிறுநீரகம்” உலக வரலாற்றில் சாதித்தது அமெரிக்கா…!!

உலகிலேயே முதன்முதலாக  உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக அமெரிக்காவில் ஆளில்லா குட்டி விமானம் மூலம் சிறுநீரகம் கொண்டு செல்லப்பட்டது. அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் கடந்த 8 ஆண்டுகளாக சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்த 44 வயது பெண்மணிக்கு சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்ததையடுத்து  அவருக்கு மேரிலேண்டு மருத்துவ மைய பல்கலைக்கழகத்தில் இந்த  சிகிச்சை நடந்தது. இதில் அமெரிக்க நிறுவனம் ஒன்று சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக நோயாளிகளிடம், உறுப்புகளை விரைவாக கொண்டு […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் புயலில் சிக்கி 5 பேர் பரிதாப பலி…!!

அமெரிக்காவில் உள்ள பல்வேறு மாநிலங்களை புயல் தாக்கியதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அமெரிக்காவில் தற்போது கனமழை காரணமாக அங்குள்ள பல்வேறு மாநிலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அலபாமா, மிசிசிபி, லூசியானா, டெக்சாஸ் ஆகிய மாநிலங்களில் இந்த புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து பலத்த மழையின் காரணமாக ஒரு லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் மின் வினியோகம் இன்றி இருளில் மூழ்கின. மிசிசிபி மாகாணத்தில், லிங்கன் கவுண்டி என்ற இடத்தில் மரம் வேரோடு சாய்ந்து 63 வயதான முதியவர் உயிரிழந்தார். மேலும் […]

Categories

Tech |