பொருளாதாரத்திலும், தொழில்நுட்பத்திலும் வளர்வதற்கான ஆர்வத்தை இந்தியா தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது என ஐ.நா-வுக்கான இந்தியாவின் முன்னாள் தூதர் அசோக்குமார் முகர்ஜி தெரிவித்துள்ளார். இந்திய வெளியுறவுக் கொள்கையில் பல்வேறு சீர்திருத்தங்களுக்கு வித்திட்ட ஆண்டு 2019. ஏற்கனவே இருந்த ஆட்சியாளர்கள், மே மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலுக்குப் பிறகு கூடுதல் வலிமையுடன் மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர் வெளியுறவுத்துறை அமைச்சராகியிருக்கிறார். சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு கூடுதல் முக்கியத்துவம் கிடைக்க இது வழிவகுத்திருக்கிறது. இந்திய வெளியுறவுத்துறைக்கு ஆகஸ்ட் மாதத்தில் […]
