போக்சோ சட்டத்தின்கீழ் உள்ள வழக்கு விசாரணையை இரண்டு மாத காலங்களுக்குள் முடிக்கமாறு மாநில முதலமைச்சர்களை மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா கேட்டுகொண்டுள்ளார். சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் மத்தியப் பிராந்திய கவுன்சிலின் 22ஆவது கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், மத்தியப் பிராந்திய கவுன்சிலில் இடம்பெற்றுள்ள மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர், ஒவ்வொரு மாநிலங்களிலிருந்தும் 2 அமைச்சா்கள், தலைமைச் செயலர்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனர். இந்தச் சந்திப்புக்கு உள் துறை அமைச்சர் […]
