கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானை ஆய்வு செய்வதற்கு ஐநாவின் பொதுச் செயலாளர் சென்றுள்ளார். பாகிஸ்தான் நாட்டில் கடந்த ஜூலை மாதத்தில் இருந்து பருவமழையானது தீவிரமடைந்து அந்நாட்டை பெரும் பாதிப்புக்கு உள்ளாகியது. இதன் காரணமாக அந்நாட்டில் உள்ள பல்வேறு நகரங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மேலும் நாட்டின் மொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு நீரில் மூழ்கியுள்ளதாக பாகிஸ்தான் பருவநிலை மாற்ற மந்திரி தெரிவித்துள்ளார். இதனை அடுத்து கனமழையின் தாக்கமானது குறைந்து வரும் வேளையில் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் […]
