உக்ரைனின் ஒடேசா, கார்கிவ், மைக்கோல், மரியுபோல் உள்ளிட்ட முக்கிய நகரங்களையும் ரஷ்யா தாக்கி வருகிறது. ரஷ்யா, உக்ரைனுக்குமிடையே கிரீமியா தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. இதனையடுத்து ரஷ்யா ஒரு லட்சத்துக்கும் மேலான தங்களது படைகளை உக்ரைனின் எல்லையில்குவித்துள்ளது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவை பலமுறை எச்சரித்துள்ளது. இவ்வாறு இருக்க கிழக்கு உக்ரைனிலுள்ள தங்கள் நாட்டு ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலிருக்கும் டுனெட்ஸ் மற்றும் லுகன்ஸ் பகுதிகளை ரஷ்யா தனி நகரமாக அங்கீகரித்துள்ளது. […]
