ஈராக் விமானப்படை தளம் மீது அமெரிக்க வீரர்களை குறி வைத்து ராக்கெட் தாக்குதல் எனத் தகவல் வெளியாகியுள்ளது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவின் பேரில் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஈரான் பாதுகாப்பு படை தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இருநாடுகளுக்கும் இடையேயான மோதல் விஸ்வரூபம் எடுத்தது. இதற்குப் பதிலடி தரும் விதமாக, ஈராக்கில் அமெரிக்கப் படைகள் முகாமிட்டிருக்கும் அல் ஆசாத் மற்றும் இர்பில் ஆகிய இரண்டு விமானத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் மேற்கொண்டது. […]
