இந்தியாவிற்கு உலகின் மிகப்பெரிய சரக்கு விமானம் மூலம் மருத்துவ உபகரணங்களை பிரித்தானிய அரசு அனுப்பி வைத்துள்ளது. இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவிக் கொண்டிருக்கின்றது. அதிலும் குறிப்பாக டெல்லி, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனால் மருத்துவமனைகளில் படுக்கைகள் தட்டுப்பாடும் ஆக்சிஜன் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இந்த ஆக்சிஜன் தட்டுப்பாட்டினால் அதிக அளவு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதனை சமாளிக்க முடியாமல் இந்தியா உலக நாடுகளை […]
