சோர்வாக அமர்ந்துவிடக் கூடாது என்று திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை குறித்த அறிக்கையில் உதயநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். திமுக இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை குறித்து இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இரண்டு பக்க விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் , தலைமையகமான அன்பகத்தில் நடைபெற்ற இளைஞர் அணி உறுப்பினர் முகாமில் 17 வயது நிரம்பிய பள்ளி படிக்கும் தம்பி ஒருவர் என்னை இளைஞர் அணியில் சேர்த்தாலே போதும் என்று நம் நிர்வாகிகளுடன் விடாப்பிடியாக மல்லுக்கு நின்றான். […]
