மன்னார்குடி அருகே ஒரே வீட்டில் இரண்டு குழந்தைகள் மர்ம காய்ச்சலால் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தலையாமங்கலம் பாரதியார் நகரைச் சேர்ந்த தம்பதியினர் சிவக்குமார், நிஷா. கூலி வேலை செய்யும் இவர்களுக்கு சசிவிந்த்(4), அசிவிந்த்(2) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.இரண்டு குழந்தைகளும் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு காய்ச்சல் என அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், இவர்களுக்கு மஞ்சள் காமாலை என மருத்துவர்கள் கூறியதால், மஞ்சள் காமாலைக்கான சிகிச்சை அளித்துவந்துள்ளனர். ஆனால் […]
