வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பான புகாரை ஏற்க மாநில அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு இடையே ஏற்பட்ட குழப்பத்தால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள புல்லூர் ஊராட்சியில் ராம்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற ஒரு மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் இருக்கின்றனர். இவர் வாணியம்பாடி புத்து கோவில் பகுதியில் வசித்து வரும் இரண்டு பேருக்கு 7 லட்சம் ரூபாயை கடனாக கொடுத்துள்ளார். […]
