நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியை தக்க வைத்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் போல், உடையணிந்த சிறுவனின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 8ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. அன்று பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு, அதன் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இத்தேர்தலில் ஆளுங்கட்சியான ஆம் ஆத்மி 62 இடங்களில் முன்னிலை வகித்து, ஆட்சியை தக்க வைத்துள்ளது. அடுத்த இடத்தில் எட்டு […]
