இடைவிடாமல் டி.வி, பார்த்தாலும், செல்போனை பயன்படுத்துவதாலும் கண்களுக்கு பாதிப்பு உண்டாகும் என மருத்துவ நிபுணர் தெரிவித்திருக்கிறார். நாடு முழுவதும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்கின்றனர். அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் மக்கள் காலை நேரங்களில் வெளியே வருகின்றனர். மற்ற நேரங்களில் வீட்டிற்குள்ளேயே அடைந்து இருக்கின்றனர். இப்படி பட்ட சூழ்நிலையில் வீட்டில் இருக்கும்பொழுது அனைவரும், முக்கியமாக, சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் வரை டி.வி. மற்றும் செல்போனை இடைவிடாமல் பார்த்தும், […]
