உடல் நலம் சரியில்லாத காரணத்தால் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் மீனாட்சி அம்மாள் என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் மீனாட்சி மிகவும் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் மீனாட்சி தனது வீட்டில் இருந்த மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து மூதாட்டியின் அலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று பற்றி […]
