தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டியில் சி.பி.எஸ்.இ பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில் கீழ ஆம்பூர் கேம்பிரிட்ஜ் சி.பி.எஸ்.சி பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் கோ-கோ போட்டியில் 12,14,17,19 வயது பிரிவுகளில் கலந்து கொண்ட அந்த பள்ளி மாணவர்கள் அனைத்து போட்டிகளிலும் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்து மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். இதனை அடுத்து சாதனை படைத்த மாணவ மாணவிகளை பள்ளியின் தலைவர் ராபர்ட், தாளாளர் ஆனி மெட்டில்லா, முதல்வர் அமலா ஜூலியன் […]
