மதுரையில் மஞ்சள் தூளை தண்ணீர் லாரிகளில் போட்டு கலக்கி ரோடு முழுவதும் தெளித்து கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கையை அப்பகுதி மக்கள் மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்றை முற்றிலும் தடுப்பதற்காக பாரத பிரதமர் நரேந்திர மோடி சுய ஊரடங்கை கடைபிடிக்குமாறு அறைகூவல் விடுத்திருந்தார். இந்த அறைகூவலை ஏற்று நாடு முழுவதும் மக்கள் சுய ஊரடங்கை கடைப்பிடித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதலே மக்கள் வெளியில் வராமல் வீட்டிற்குள் முடங்கி இருப்பதாக தமிழகம் மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலும் […]
