அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் துளசி கபார்ட் ஒரு ரஷ்ய கைக்கூலி என முன்னாள் அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளின்டன் மறைமுகமாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ஆலோசகரான டேவிட் பிளப்ஃபியுடன் சேர்ந்து பாட்காஸ்ட் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஹிலாரி கிளின்டன், “ஜனநாயகக் கட்சியின் முன்னணி பெண் வேட்பாளர் ஒருவரை ரஷ்யா தன் கைக்குள் போட்டுக்கொண்டு அவருக்கு ஆதரவு அளித்து வருகிறது. ரஷ்யர்களின் விருப்பத்திற்குரியவராக அவர் விளங்குகிறார். அந்த நபரின் தேர்தல் […]
