சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி உருவாகும் வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆஸ்திரேலியாவிற்கும் பிஜிக்கும் இடையே கடலுக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறும்போது, இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவாகி இருந்ததாகவும், இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி உருவாகும் அச்சம் ஏற்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் நியூசிலாந்து பிஜி மற்றும் வனுவாட்டுவின் […]
