ட்ரோன் கேமரா வாக்கு எண்ணும் மையத்திற்கு மேல் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் உள்ள தெத்தி பகுதியில் தனியார் கல்லூரி ஒன்றில் கீழ்வேளூர், வேதாரண்யம், நாகை ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. அங்கு 3 அடுக்கு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று இந்த மையத்தின் மேல் ட்ரோன் கேமரா அரை மணி நேரமாக பறந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த […]
