மலைவாழ் மக்கள் 20 கிலோ மீட்டர் தூரம் பயணித்து வாக்குச்சாவடியில் தங்களது ஓட்டினை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள விக்ரமசிங்கபுரம் நகராட்சியில் 21-வார்டுகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இதற்காக நேற்று முன்தினம் இஞ்சிகுழி கிராமத்தில் வசிக்கும் 20 வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றுவதற்காக காலையில் ஊரிலிருந்து புறப்பட்டு 12 கிலோமீட்டர் தூரம் வனப்பகுதியில் நடந்துள்ளனர். அதன் பிறகு 8 கிலோமீட்டர் படகில் பயணித்து இரவு நேரத்தில் காரையாறு […]
