சுமார் 3 அடி உயரமுள்ள ராட்சத கிளியின் புதைபடிவம் நியூசிலாந்தில் புதைபடிவ நிபுணர் ட்ரெவர் வொர்த்தி கண்டெடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவின் பல்கலைக்கழகப் போராசிரியரும், புதைபடிவ நிபுணருமான ட்ரெவர் வொர்த்தி, நியூசிலாந்தில் தெற்கு பிராந்தியமான ஒட்டாகோவில் பகுதியில் புதைபடிவ ஆய்வில் ஈடுபட்டிருந்த போது 2 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ராட்சத கிளி புதைபடிவங்களை கண்டெடுத்துள்ளார். அந்த கிளியானது சுமார் 3 அடி உயரத்தில் 7 கிலோ எடையிலும், ஒரு சராசரி மனிதன் உயரத்தின் பாதிக்கும் மேலாக இருந்திருக்கும் என்று கூறப்படுகின்றது. இந்த கிளியின் வலிமையையும், அசாதாரண உயரத்தையும் வைத்து கிளி எப்படி இருந்துள்ளது என்று […]
